பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

சட்டப் பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான சனிக்கிழமை பேரவை அலுவல்கள் அனைத்தும் நிறைவடைந்ததும், அவையை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. ஜூலை 30-ஆம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பேரவைக் கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அலுவல் ஆய்வுக் குழு கூடி பேரவை கூடும் நாள்களை மாற்றியமைத்தது. அதன்படி, கடந்த வாரத்தில் இருந்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பேரவைக் கூட்டத் தொடர் நடந்தது. மொத்தம் 16 நாள்கள் நடந்த கூட்டத் தொடர் சனிக்கிழமை (ஜூலை 20) நிறைவடைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com