அதிர்ச்சி ஆனால் உண்மை! 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கலையாம்!

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
அதிர்ச்சி ஆனால் உண்மை! 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கலையாம்!


பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

ஆனால், நாட்டிலோ இந்த திட்டத்துக்கு எதிரான சூழலே நிலவி வருகிறது. சிறுமிகளுக்கு எதிரான பலாத்கார வன்முறைச் சம்பவங்களும், இதுபோன்ற செய்திகளுமே அதற்கு உதாரணம்.

இந்த நிலையில்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற புள்ளி விவரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில் இந்த 132 கிராமங்களிலும், கடந்த 3 மாதங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், இதில் ஒரு பெண் குழந்தை கூட இல்லை என்பது மாவட்ட நிர்வாகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சில குறிப்பிட்ட பகுதிகளில் பெண் குழந்தை பிறப்புகளே இல்லாமலும், ஒருசில இடங்களில் ஒற்றை இலக்கத்தில் இருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இந்த அளவுக்கு பாலின விகிதாச்சாரம் மாறுபட்டிருப்பதற்குக் காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்யவும் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார ஆய்வாளர் கூறுகையில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்காதது, பெண் சிசு கருக்கலைப்பு நடப்பதையே உறுதி செய்வதாகக் கூறியுள்ளார். இது இயற்கையாக நடந்த விஷயமாக பார்க்கவே முடியாது. இதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆதங்கத்தோடு குறிப்பிடுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com