Enable Javscript for better performance
மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்படாத மருத்துவமனைகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்படாத மருத்துவமனைகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 23rd July 2019 02:42 AM  |   Last Updated : 23rd July 2019 02:42 AM  |  அ+அ அ-  |  


    பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக காவல் நிலையங்களில் ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்படாத மருத்துவமனைகளின் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவக் கல்லூரி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது. 
    பாலியல் கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அனைத்து காவல் நிலையங்களிலும் ஆலோசனை மையங்கள் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணபிரியா பவுண்டேசன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 
    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இதுபோன்ற ஆலோசனை மையங்கள் சமூக பாதுகாப்பு துறை மூலம் நடத்தப்படுகின்றன. இந்த ஆலோசனை மையங்கள் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மற்றும் காவல் துறை ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது. எனவே அனைத்து காவல் நிலையங்களிலும் அமைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, மாவட்டம்தோறும் அமைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்படாத மருத்துவமனைகளின் விவரங்களைத் தாக்கல் செய்ய மருத்துவக் கல்லூரி இயக்குநருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp