சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவை: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

சேலம் - சென்னை 8 வழி சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி தேவை என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவை: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் தகவல்


சேலம் - சென்னை 8 வழி சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி தேவை என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் கோடைகால அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை - சேலம் இடையேயான 8 வழி சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்ததுடன், இந்த வழக்கில் தீவிரமான பிரச்னை அடங்கியுள்ளது. 
நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஆராய வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பின்னர், மேல்முறையீட்டு மனு தொடர்பாக எதிர் மனுதாரர்களான மத்திய அரசு, தமிழக அரசு, விவசாயிகள் பி.வி. கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் தமிழ்நாட்டுத் தேவையில்லை என்றால், தேவைப்படும் மாநிலத்துக்கு அளியுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, இந்த 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சூழல் அனுமதியைக் கோர முடியும். 
எனவே, இடைக்கால நிவாரணமாக இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.
அப்போது, சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான வழக்கை தற்போது விசாரிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தோர்களின் எண்ணிக்கை, உச்சநீதிமன்றத்தில் எதிர்மனுதாரர்களாக சேர்ந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து வினவினர். 
மேலும், இது தொடர்பாக எதிர்ப்பு, ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் ஒரு வாரத்துக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com