ஜூலை 18 வரை பட்டியலில் பதிவு செய்தோர் வாக்களிக்கலாம்: வேலூர் தேர்தல் குறித்து சத்யபிரத சாகு தகவல்

கடந்த ஜூலை 18-ஆம் தேதி வரை பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்த வாக்காளர்கள் வேலூர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
ஜூலை 18 வரை பட்டியலில் பதிவு செய்தோர் வாக்களிக்கலாம்: வேலூர் தேர்தல் குறித்து சத்யபிரத சாகு தகவல்


கடந்த ஜூலை 18-ஆம் தேதி வரை பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்த வாக்காளர்கள் வேலூர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:-
வேலூரில் மொத்தம் உள்ள 1,553 வாக்குச்சாவடிகளில் 850 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட  உள்ளன.  மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் விடியோ பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த வாக்குச்சாவடிகளில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக்  கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக இதுவரை ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.89 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 980  கிராம் தங்கமும் பறிமுதல் ஆகியுள்ளது. 
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக 10 கம்பெனி துணை ராணுவப் படையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படை தேவையென தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம். பணப்புழக்கத்தைக்  கண்காணிக்க  வருமானவரித்துறை சார்பில் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் பெயர்: ஜுலை 18-ம் தேதி வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். வேலூரில் வாக்குப்பதிவு நாளுக்கு ஏழு நாள்கள் முன்பிருந்து, வாக்குச்சாவடி சீட்டு அளிக்கப்படும். ஆனாலும், வாக்காளர்கள் இதைக் காண்பித்து வாக்களிக்க முடியாது.  ஆணையம் வரையறுத்துள்ள மற்ற ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என்றார் சத்யபிரத சாகு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com