
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேசுவரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஜூலை 30 ஆம் தேதி முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட சிறப்பு விரைவு ரயிலை இயக்கப்பட உள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன் விவரங்கள்:மதுரை - ராமேசுவரம் சிறப்பு ரயில் ஜூலை 30 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும். இந்த ரயில் கீழ் மதுரையில் இருந்து இரவு 12.05 மணிக்கும், சிலைமானிலிருந்து இரவு 12.14 மணிக்கும், திருப்புவனத்தில் இருந்து 12.25 மணிக்கும், திருப்பாச்சேத்தியிலிருந்து இரவு 12.36 மணிக்கும் மானாமதுரையில் இருந்து இரவு 12.55 மணிக்கும், பரமக்குடியில் இருந்து அதிகாலை 01.21 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து அதிகாலை 01.51 மணிக்கும், உச்சிப்புளியில் இருந்து அதிகாலை 02.06 மணிக்கும், மண்டபத்தில் இருந்து அதிகாலை 02.19 மணிக்கும், பாம்பனிலிருந்து அதிகாலை 02.41 மணிக்கும் புறப்படும்.
மறுமார்க்கத்தில், ராமேசுவரம் - மதுரை சிறப்பு ரயில் ராமேசுவரத்திலிருந்து ஜூலை 30 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில் மண்டபத்திலிருந்து இரவு 12.05 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கும், பரமக்குடியிலிருந்து இரவு 12.55 மணிக்கும், மானாமதுரையிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கும் கீழ் மதுரையிலிருந்து அதிகாலை 02.05 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.