Enable Javscript for better performance
அத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழக்கவில்லை- தமிழக அரசு- Dinamani

சுடச்சுட

    

    அத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழக்கவில்லை- தமிழக அரசு

    By DIN  |   Published on : 25th July 2019 04:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Athi_Varadar_Raising


    சென்னை: அத்திவரதரை தரிசிக்க வந்தவர்களில் 6 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    அத்திவரதர் தரிசனத்துக்கு மத்திய துணைப் பாதுகாப்புப் படை வீரர்களை அழைப்பது, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    அதில், அத்திவரதரை தரிசிக்க வந்து உயிரிழந்த 6 பேருக்கும் ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அத்திவரதரை தரிசித்தப் பிறகே 6 பேரும் உயிரிழந்துள்ளனர், கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதில் மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து வழக்குகளிலும் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai