Enable Javscript for better performance
இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை- Dinamani

சுடச்சுட

    


    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தென்மேற்குப் பருவமழை காரணமாக, நீலகிரி கோயம்புத்தூர், தேனி ஆகிய 3 மாவட்டங்களிலும், வெப்பச்சலனம் காரணமாக, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 25) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பகலில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதன்பிறகு,  பொதுவாக  மேகமூட்டமாகவும், சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்றார் அவர்.
    பருவமழை: வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில் பருவமழை மிதமாக வலுவடைந்து வருகிறது. இதுபோல, அரபிக்கடலிலும் பருவமழை மிதமாக வலுவடைகிறது.  
    மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி கடலோரத்தில் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கவனமாக செயல்பட வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதவிர, தென் தமிழக கடலோரத்தில் குளச்சலில் இருந்து தனுஷ்கோடி வரை  ஜூலை 25-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை 3.5 மீட்டர் முதல் 4.0 மீட்டர் வரை அலைகள் உயர எழும்பும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று இந்திய பெருங்கடல் தகவல் சேவைக்கான மையம் எச்சரித்துள்ளது.
    மழை பதிவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை டிஜிபி அலுவலகம், சேலத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவானது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், சென்னையில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சேலம் மாவட்டம் ஏற்காடு, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், சின்னக்கல்லார், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், சென்னை விமானநிலையம், மாதவரத்தில் தலா  30 மி.மீ. மழை பதிவானது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai