Enable Javscript for better performance
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    keralaboat

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி முனிவேல், ஸ்டீபன் ராஜ், மணிகண்டன் மற்றும் குமார் ஆகிய 4 மீனவர்களை கைது செய்தனர்.

    அத்துடன் அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 மீனவர்களையும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தியது. பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர் . 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai