Enable Javscript for better performance
கண்ணீர்விட்டு ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த மைத்ரேயன்- Dinamani

சுடச்சுட

    
    mythreyan



    மாநிலங்களவையில் புதன்கிழமை பதவிக்காலம் முடியும் அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த போது கண்ணீர்விட்டு அழுதார்.
    மேலும்,  ஜெயலலிதா மீதான தனது விசுவாசம் என்றும் நிலைத்திருக்கும் என்றும் தனது நீண்டகால நண்பராக இருந்துவரும்  பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்,  தனது தலைவருக்கும்,  பிரதமருக்கும் ஒரு பாலம் போல தான் செயல்பட்டதாகவும் மைத்ரேயன் உரையில் குறிப்பிட்டார். 
    அவர் மேலும் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் 14 ஆண்டுகள் 5 மாதங்களில் எனது பதவிக் காலம் முடிந்திருக்கலாம். 
    ஆனால்,  மாநில அரசியலில் புதிய இன்னிங்ஸ் தொடங்க உள்ளேன். 2009, மே மாதம் தமிழ் ஈழத்தின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இலங்கையில் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இந்த அவையில் இரங்கல் தீர்மானமோ, மெளன அஞ்சலியோ செலுத்தவில்லை. 
    இது எனது நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக தைத்துக் கொண்டே இருக்கும். எனது வாழ்வின் முடிவு ஏற்பட்டாலும் கூட எந்தவித இரங்கல் தீர்மானமோ மெளன அஞ்சலியோ இந்த அவையில் எனக்கு வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai