Enable Javscript for better performance
கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    


    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் அவரது உருவச் சிலை  திறக்கப்பட உள்ளது. இதனை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார்.  இவ்விழாவில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
    இந்த விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai