Enable Javscript for better performance
கார் மீது பேருந்து மோதியதில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    கார் மீது பேருந்து மோதியதில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி

    By DIN  |   Published on : 25th July 2019 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஆந்திர மாநிலம் நகரி அருகே தமிழக அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் சென்னை அருகே பாலமங்கலத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.
    பாலமங்கலத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை வந்தனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 
      சித்தூர் மாவட்டம் நகரியை அடுத்த கன்ன மெட்டு என்ற இடத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதியது. கார் சுக்குநூறாக நொறுங்கியதால் உடல்கள் காருக்குள் நசுங்கின.
     இதில் சம்பவ இடத்திலேயே முத்து கிருஷ்ணன்(46), அனந்த குமார் (50),  மூர்த்தி (39), பாலாஜி (49) உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.  ஜன ரஞ்சனி (25),  ஹேமலதா (27) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
    மருத்துவர்: ஹேமலதா காவேரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருவதால் காயமடைந்தவர்களை சென்னைக்கு அழைத்து சென்றனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  இதனால் இச்சாலையில் போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. 
     இதுகுறித்து நகரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai