Enable Javscript for better performance
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென பயணித்த மு.க.ஸ்டாலின்!- Dinamani

சுடச்சுட

    
    stalin4

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். 

    நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தி.மு.க மேயர் உமா மகேஸ்வரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின், மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது மெட்ரோவில் பயணித்த பயணிகளிடம் குறைகளைக் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தொடர்ந்து ஸ்டாலினுடன் பயணிகள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
    மெட்ரோ ரயிலில் மற்ற நேரங்களில் வந்தால் பொதுமக்களுக்கு சற்று இடையூறாக இருக்கும் என்று கருதி நான் முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதனால், இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கின்றேன்.

    இந்த மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக, தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த போது, நான் துணை முதல்வராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று, அந்நாட்டு வங்கிகளில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதியினைப் பெறுவ தற்கு முயற்சிகள் மேற்கொண்டேன்.

    இந்த திட்டம் இன்று வெற்றிகரமாக நிறைவுற்று மக்களுக்குப் பயன்படும் வண்ணம் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தத் திட்டத்திற்காக நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். அதை நினைத்துப் பெருமையடைகிறேன்.

    இந்தத் திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, நான் தொடங்கிவைத்தேன்.

    இன்றைக்கு மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரையில் பயணக்கட்டணம் அதிகமாக இருக்கின்றது. உச்சபட்ச பணிநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அது என்னவென்று, நேரடியாகப் பார்க்கலாம் என்று தான் வந்தேன், அதனைப் பார்த்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai