Enable Javscript for better performance
நடிகர் விஷால் மீது வருமான வரித்துறை  வழக்கு: ஆக.2 இல் ஆஜராக  நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    நடிகர் விஷால் மீது வருமான வரித்துறை  வழக்கு: ஆக.2 இல் ஆஜராக  நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 25th July 2019 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vishal


    வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமாக  விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரிப் பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை, நிறுவனத்தின் உரிமையாளர் நடிகர் விஷால் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து வருமான வரித்துறை, நடிகர் விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. 
    இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், நடிகர் விஷால் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.  ஏற்கனவே ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என சேவை வரித்துறை நடிகர் விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai