Enable Javscript for better performance
நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயரின் பணிப்பெண்ணுக்கு திமுக நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயரின் பணிப்பெண்ணுக்கு திமுக நிதியுதவி

    By DIN  |   Published on : 25th July 2019 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk3

    நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயரின் பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. 

    திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகசங்கரன் (72). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி உமா மகேஸ்வரி (65) திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்தார். அவர், 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராகப் பணியாற்றினார். 

    இந்நிலையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப் பெண் மாரி (30) ஆகிய 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயரின் பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. 

    உயிரிழந்த மாரியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய மூவரும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12, 10, 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பே கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் மாரியம்மாள்தான், தன் பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai