Enable Javscript for better performance
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய  டிஜிபிக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய  டிஜிபிக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 25th July 2019 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உள்பட மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மூன்று நாள்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக காவல்துறைத் தலைவர் (டிஜிபி), நெல்லை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகசங்கரன் (72).  இவரது மனைவி உமா மகேஸ்வரி (65). அவர், 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராகப் பணியாற்றினார். இந்நிலையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப் பெண் மாரி (30) ஆகிய 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இக்கொலை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற மூன்று நாள்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக காவல் துறைத் தலைவர், நெல்லை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai