Enable Javscript for better performance
பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு கர்டர்களை மாற்றும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு கர்டர்களை மாற்றும் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பாம்பன் ரயில் பாலத்தில் சேதமடைந்துள்ள 8 இரும்பு கார்டர்களை மாற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
     ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடல் பகுதியில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாலம் 1914 -ஆம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
     பாம்பன் ரயில் பாலத்தில் 143 இரும்பு கர்டர்கள் உள்ளன. இந்த கர்டர்கள் சேதமடைந்து வரும் நிலையில், அவற்றை மாற்ற திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.8 கோடி மதிப்பீட்டில் 27 இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 19 கர்டர்கள் ஏற்கெனவே மாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள 8 கர்டர்களை மாற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது. 
    முதல் 4 கர்டர்கள் கொண்டு வரப்பட்டு மாற்றும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிக்காக மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயில் மண்டபத்துடன் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai