Enable Javscript for better performance
பார்வையற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு: முதல்வர் பழனிசாமி வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    பார்வையற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

    By DIN  |   Published on : 25th July 2019 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cm3

    பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

    பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அச்சகங்களில் பணி அளிப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அளித்தார். 
    இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 
    இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
     மாநிலம் முழுவதும் உள்ள அரசுத் துறைகளின் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் படிவங்கள், பதிவேடுகள், பிறப்பு, இறப்புச் சான்றுகள், தேர்தல் படிவங்கள், தேசிய மக்கள் தொகை பதிவேடுகள் ஆகியவற்றை எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையானது வழங்கி வருகிறது. இந்தத் துறையில் மொத்தப் பணியாளர்களில் 14 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
    அந்த வகையில், சென்னையை அடுத்த பூந்தமல்லி அரசு  தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, ஏழு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இளநிலை புத்தகம் கட்டுநர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணி நியமன உத்தரவை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அளித்தார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ஆ.கார்த்திக் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai