Enable Javscript for better performance
பாலாற்றில் தடுப்பணைகளின் உயரம் அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    பாலாற்றில் தடுப்பணைகளின் உயரம் அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

    By DIN  |   Published on : 25th July 2019 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    STALINC


    பாலாற்றில் தடுப்பணைகளின் உயரத்தை ஆந்திர அரசு அதிகரித்து வருவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    தமிழகத்தின் நீண்ட கால நதி நீர் உரிமைகள், அதிமுக ஆட்சியில் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருப்பதன் அடுத்தகட்டமாக, ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே 40 அடி உயரத்துக்கு 22 தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதை அதிமுக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.  குடிநீர் மற்றும் பாசனத்துக்கான நீரின்றி, வறட்சிப் பிரதேசங்களாக 5 மாவட்டங்களை மாற்றும் ஆபத்து நிறைந்த இந்த தடுப்பணைகளைப் பொதுப்பணித் துறையை வைத்திருக்கும் முதல்வர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.
    விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தடுப்பணைகள் கட்டும் பணிகளைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கடந்த 2016-இல் வேலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறேன்.  அந்த ஆர்ப்பாட்டம் நடப்பதை முன்கூட்டி அறிந்து கொண்ட அதிமுக அரசு, தடுப்பணை கட்டத் தடையாணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால் இன்று வரை  தடையுத்தரவு பெற முடியவில்லை.
    எனவே, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள், வேளாண்மை, குடிநீர்த் தேவை ஆகியவற்றுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையான இந்த 40 அடி உயர தடுப்பணைகள் கட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
     ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாலாற்று வழக்கில், ஆந்திர மாநில அரசுக்கு எதிராக அவசர தடையுத்தரவு பெற்றிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai