Enable Javscript for better performance
பொருளாதார ரீதியிலான ஏழாவது கணக்கெடுப்பு: மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொருளாதார ரீதியிலான ஏழாவது கணக்கெடுப்பு: மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பொருளாதார ரீதியிலான ஏழாவது கணக்கெடுப்பை மேற்கொள்ள மாவட்ட- மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.
     இந்தக் கணக்கெடுப்புப் பணியானது மத்திய அரசின் முழுமையான நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.
     மாநிலத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை தொடர்பாக கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், மாநிலத்தின் பொருளாதார நிலைமைகளை அறிந்து கொள்ள வழி ஏற்படும். இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணியைக் கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    அதன்படி, மாநில அளவிலான குழுவுக்கு தலைமைச் செயலாளர் தலைவராகவும், திட்டம்-வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறைச் செயலாளர் துணைத் தலைவராகவும் இருப்பர்.
    பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர், கூடுதல் இயக்குநர் ஆகியோருடன், சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலாளர், தொழில் வணிகத் துறை இயக்குநர், தொழிலாளர் நலத் துறை இயக்குநர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆணையர்கள், நிர்வாக இயக்குநர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
    சென்னையைப் பொருத்தவரை மாநகராட்சி ஆணையர் தலைவராகவும், சென்னை மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள். மாவட்டங்களில் ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. 
    இதில் மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையர், வணிகவரிகள் துணை ஆணையர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்டோர் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai