Enable Javscript for better performance
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி குமரி அனந்தன் பிரசார பயணம்- Dinamani

சுடச்சுட

    

    மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி குமரி அனந்தன் பிரசார பயணம்

    By DIN  |   Published on : 25th July 2019 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவர் குமரி அனந்தன் வரும் 26-ஆம் தேதி முதல் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    இதற்காக பூரண மதுவிலக்கை அமல்படுத்திய முன்னாள் முதல்வர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து, இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
    ஜூலை 26-இல் ஓமந்தூரில் ராமசாமி ரெட்டியார் சிலைக்கும், ஜூலை 29-இல் ராஜபாளையத்தில் குமாரசாமி ராஜா சிலைக்கும்,  ஆகஸ்ட் 5-இல் தொரப்பள்ளியில் ராஜாஜி சிலைக்கும், விருதுநகரில் காமராஜர் சிலைக்கும், மீஞ்சூரில் எம்.பக்தவத்சலம் சிலைக்கும், காஞ்சிபுரத்தில் அண்ணா சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார்.
    இந்தப் பயணங்களுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து, காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்க உள்ளார். குமரி அனந்தனோடு இணைந்து பலரும் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai