Enable Javscript for better performance
மாணவியை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் காதலன் கைது- Dinamani

சுடச்சுட

    


    திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவியை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில், தலைமறைவாக இருந்த காதலனை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள பட்டீசுவரத்தைச் சேர்ந்த சுந்தர் மகள் ரம்யா (23).  திருமணமாகி விவாகரத்து ஆன இவர், திருச்சி சட்டக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.  காஜாமலை முஸ்லிம் தெருவில்  வாடகை வீட்டில் வசித்து கல்லூரிக்கு வந்து சென்றார்.
    இந்த நிலையில் ரம்யாவுக்கும், காரைக்காலைச் சேர்ந்த தவச்செல்வனுக்கும் (27) இடையே காதல் விவகாரத்தில் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது.  அப்போது தவச்செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரம்யா மீது ஊற்றி, தீ வைத்துத் தப்பிச் சென்றார். தீக்காயமடைந்த ரம்யா, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து தவச்செல்வனைத் தேடி வந்தனர்.  இந்நிலையில் சாத்தனூர் வடுகப்பட்டி பகுதியில் சுற்றித் திரிந்த தவச்செல்வனை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai