Enable Javscript for better performance
வட தமிழக மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வட தமிழக மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்

    By DIN  |   Published on : 25th July 2019 01:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    balachandran


    சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது, தென் மேற்கு பருவ மழை தற்பொழுது கர்நாடகாவில் தீவிரமாக உள்ளது.  தற்பொழுது தமிழக பகுதிகளில் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக அடுத்து இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும்,  தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

    கன மழையைப் பொறுத்தவரை..

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்  ஆகிய வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யும். 

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக..
    மீனம்பாக்கம் 8 செ.மீ.
    காஞ்சிபுரம் 8 செ.மீ. 
    அண்ணா பல்கலை 7 செ.மீ.
    காவேரிபாக்கம் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai