Enable Javscript for better performance
வெளிநாடுகளில் துன்புறும் பணிப்பெண்களை  அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாடுகளில் துன்புறும் பணிப்பெண்களை  அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்

    By DIN  |   Published on : 25th July 2019 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்று பரிதவிக்கும் பெண்களைத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீட்டு வேலைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
     தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் வளர்மதி சென்னையில் புதன்கிழமை இது குறித்து கூறியது: 
    வளைகுடா நாடுகளில் அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, அங்கு  செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
    இதுபோல, ஊத்துக்குளியைச் சேர்ந்த திருமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரியும் குவைத் சென்றுள்ளார். அங்கு அவர் கை, கால்கள் உடைக்கப்பட்ட நிலையில், தாய் நாடு திரும்ப  எங்களை அணுகினார். 
    தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளார். எனினும் குவைத் நாட்டில் திருப்பூரைச் சேர்ந்த வசந்தாமணி, விருதுநகர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். 
    இதேபோல், ஓமன் நாட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்த கல்பனா, திருவண்ணாமலையைச் சேர்ந்த சசிகலா, மதுரையைச் சேர்ந்த கௌசிகா மற்றும் சிலர் இந்திய தூதரகங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai