Enable Javscript for better performance
வேலூர் மக்களவைத் தொகுதி: சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு!- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மக்களவைத் தொகுதி: சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு!

    By DIN  |   Published on : 25th July 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gift_box

    வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்ல் நடைபெறவுள்ளது. 

    இதில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளாரக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்‌, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்ததையடுத்து, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுகுமார் என்பவருக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் அமமுக கட்சி போட்டியிடாத நிலையில் அந்த சின்னம் சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai