கால்நடை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் கலந்தாய்வு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது.


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது.
தகுதியான மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை தரவிறக்கம் செய்து கொண்டு, அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வுக்கு நேரில் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், முதல் நாள் காலை 9 மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அதைத் தொடர்ந்து, நண்பகலில் தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதற்கு அடுத்த இரு நாள்களுக்கு பிற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல்,  திருநெல்வேலி,  ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச் / பி.டெக்) 460 இடங்கள் உள்ளன. 
இந்த நிலையில், 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 17 -இல்  நிறைவடைந்தது. அதில், பிவிஎஸ்சி - ஏ.ஹெச் படிப்புக்கு 15,666 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 2,772 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com