தேசிய விளையாட்டுப் போட்டி: பதக்கம் வென்ற காவல் துறையினருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற காவல் துறையினருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு காவல்துறை அணியைச் சேர்ந்த வீரர்கள், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 
பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு காவல்துறை அணியைச் சேர்ந்த வீரர்கள், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 


தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற காவல் துறையினருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
அகில இந்திய அளவிலான காவல் பணித் திறனாய்வுப் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 21 மாநிலங்களும், ஒரு யூனியன் பிரதேசமும், ஆறு துணை ராணுவப் படைகளும் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் காவல் ஆய்வாளர் ஜான்விக்டர், காவலர் ஏ.மார்ட்டின், முதுநிலை காவலர் ஐ.முருகானந்தம், உதவி ஆய்வாளர்கள் எஸ்.விஜய், எஸ்.ஏ.வீராசாமி, பி.லோகநாதன், ஏ.முரளிதரன், கே.விக்னேஷ்பிரபு, என்.ஜெயராஜ், காவல் ஆய்வாளர் கே.அருணா ஸ்ரீ, உதவிஆய்வாளர் ஜெ.இந்துமதி ஆகியோரும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் கூடுதல் எஸ்.பி., எஸ்.ஆறுமுகசாமி தலைமையிலான அணியும், அறிவியல் சார்ந்த புலனாய்வுத் திறன் போட்டியில் இரண்டாம் இடத்துக்கான சாம்பியன் பட்டத்துக்கான கோப்பையை ஆர்.ஜெயசுதா, எஸ்.பாரதி ஆகியோரும் பெற்றனர். மோப்ப நாய் பிரிவில் காவல் ஆய்வாளர் வி.கமலகண்ணன் உள்ளிட்டோர்  வெற்றி பெற்று கோப்பைகளை தட்டிச் சென்றனர்.
காமன்வெல்த் போட்டிகளில் கோப்பைகளை வென்றோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை திங்கள்கிழமை நேரில் சந்தித்தனர். அப்போது, கோப்பையை வென்றோருக்கு முதல்வர் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com