Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி: சுகாதாரத் துறை செயலர்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி: சுகாதாரத் துறை செயலர்

    By DIN  |   Published On : 31st July 2019 02:31 AM  |   Last Updated : 31st July 2019 02:31 AM  |  அ+அ அ-  |  

    chennai

    மருத்துவமனை தினத்தின்போது  கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்து வளைகாப்பு நடத்திய சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்.


    கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
    இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியை கௌரவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை கஸ்தூர்
    பா காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணபாபு முன்னிலை வகித்தார். தொடர்ந்து,  கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.  பீலா ராஜேஷ், கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை வழங்கியதுடன், சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார்.
    தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அரசு அறிவித்தபடி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் மருத்துவமனை தினமாகக் கொண்டாடப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக யோகா பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
    கர்ப்பிணிப் பெண்களுக்கென மென்பொருள் உருவாக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு தனித்தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள், தேவையான பொருள்கள் அனைத்தும் முறையாக கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் பிறப்பு சான்றிதழ்கள் எளிதில் பெற முடியும் என்றார் அவர். 
     நிகழ்ச்சியில் கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயா உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.  அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவமனை தின விழாவில் மருத்துவமனையின் இணை இயக்குநர் மணவாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதேபோல், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றிலும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp