Enable Javscript for better performance
தேசிய புலனாய்வு முகமையை அரசியலுக்காக பயன்படுத்துகிறது பாஜக: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தேசிய புலனாய்வு முகமையை அரசியலுக்காக பயன்படுத்துகிறது பாஜக: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    By DIN  |   Published On : 31st July 2019 01:36 AM  |   Last Updated : 31st July 2019 01:36 AM  |  அ+அ அ-  |  

    MK Stalin  tamilnadu  jobs

    தேசிய புலனாய்வு முகமையை தமிழகத்தில் மத்திய பாஜக அரசு  அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை பாஜக அரசு தனது கட்சி அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி வருகிறது. இது கண்டனத்துக்குரியது.
    தமிழகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு என்று தனியாக ஒரு பிரிவு டிஜிபி அலுவலகத்தில் இருக்கிறது. அதற்கு டிஐஜி தலைமையில் ஒரு தனி அதிகாரியும் இருக்கிறார். துணைப் பிரிவுகளும் இருக்கின்றன. 
    க்யூ பிராஞ்ச் என்று சொல்லப்படும் அந்தப் பிரிவு முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் மாநில அரசின் கீழ் இயங்கி வருகிறது.
    ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி, தேசிய புலனாய்வு முகமையை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து, இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்திரிக்கும் அபாயகரமான போக்கை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. 
    தமிழகத்தில் பாஜக காலூன்றி அரசியல் செய்ய விரும்பினால், மக்களின் மேலான ஆதரவைப் பெறுவதற்கு நேர்மையான ஜனநாயக வழிகள் பல திறந்தே இருக்கின்றன. 
    அதைத் தவிர்த்து, சிறுபான்மை சமுதாயத்தினரை ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளாகச் சித்திரித்து, அதன் மூலம்  பாஜகவை விதைக்கலாம் என்ற நோக்கில், தமிழகத்தில் தேசியப்  புலனாய்வு முகமையை பயன்படுத்துவதும், மாநில அரசுக்கே தெரியாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும்,  மத்திய அரசுக்கு எவ்விதத்திலும் அழகல்ல. 
    எனவே,  இது குறித்து மத்திய அரசுக்கு உரிய முறையில் தீவிர அழுத்தம் கொடுத்து, தேசியப் புலனாய்வு முகமை தமிழகத்தில் அரசியல் லாபத்தை மனதில் வைத்து, தலையிடுவதற்கும்,  ஏதுமறியாத அப்பாவி இஸ்லாமிய மக்களைத் துன்புறுத்துவதற்கும் அதிமுக அரசு  கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
    தேசிய புலனாய்வு முகமையின் நடவடிக்கை சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கு எதிராகத் தொடர்ந்தால் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் உரிய வகையில் கடுமையான முறையில், ஜனநாயக வழிகளில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp