தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு    

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு    

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதன் மாலை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ரூ.130 + ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த அறிவிப்பானது வேலூர் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களுக்கு பொருந்தும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பானது அனலாக் முறையிலிருந்த போது ரூ.70 மாதக்கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்,மத்திய அரசிடம் இருந்து முறையான ஒப்புதல் பெற்று டிஜிட்டல் ஒளிபரப்பு முறைக்கு மாற்றம் பெற்றது. நாட்டிலேயே இத்தகைய உரிமம் பெற்ற முதல் அரசு கேபிள் தமிழக அரசுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அதற்கு ரூ. 200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது     

தற்போது அதிமுக அரசு இத்தகைய கட்டணக் குறைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com