Enable Javscript for better performance
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு- Dinamani

சுடச்சுட

    

    சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

    By DIN  |   Published on : 01st June 2019 01:25 AM  |   அ+அ அ-   |    |  

    supreme court


    சேலம்-சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு எதிராக, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 
    அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, மனு மீதான விசாரணை ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது. 
    முன்னதாக, மனுவை தாக்கல் செய்த மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞர், இதை மிக முக்கியமான மனுவாகக் கருத வேண்டும் என்று நீதிபதிகள் அமர்விடம் கேட்டுக்கொண்டார். 
    மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம்-சென்னை இடையே ரூ.10,000 கோடி செலவில் 277.3 கி.மீ. தொலைவுக்கு 8 வழி பசுமைச் சாலை அமைக்க  திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இரு நகரங்களிடையேயான பயண நேரத்தை பாதியாகக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 
    எனினும், இந்தத் திட்டத்துக்கு விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த 8 வழிச்சாலை திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், அதிக அளவிலான மரங்கள் அழிக்கப்படும் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
    இந்த 8 வழிச்சாலையானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், நீர் நிலைகள் வழியே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
    இந்நிலையில், அந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை கோரி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நில உரிமையாளர்கள் 35 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
    அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது. 
    மேலும், சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறும் முன்பாக, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு உள்ளாக வரும் பகுதிகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். 
    மேலும், திட்டம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை திருப்திகரமானதாக இல்லை. முறையான ஆய்வு மேற்கொள்ளப்படாத 
    வரையில், இந்தத் திட்டத்தால் வனப்பகுதிகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய இயலாது. 
    நீர் நிலைகள் உள்ளிட்ட சூற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கும் வகையில் இருக்கும் இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த பசுமை வழிச்சாலை திட்டமானது ஒரு 10 கி.மீ. அளவுக்கு கூட பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் வழியாகச் செல்லும் பட்சத்தில், அது விலங்குகளை வேட்டையாடுவோருக்கும், மரங்களை வெட்டிக் கடத்துவோருக்கும் சாதகமாக அமைந்துவிடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp