Enable Javscript for better performance
திருமால்பூர்-கடற்கரைக்கு  மின்சார விரைவு ரயில் சேவை இன்று தொடங்குகிறது- Dinamani

சுடச்சுட

    

    திருமால்பூர்-கடற்கரைக்கு  மின்சார விரைவு ரயில் சேவை இன்று தொடங்குகிறது

    By DIN  |   Published on : 01st June 2019 01:22 AM  |   அ+அ அ-   |    |  

    rail


    திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு மின்சார விரைவு ரயில் சனிக்கிழமை ( ஜூன் 1) முதல் தொடங்குகிறது.  இந்த மின்சார விரைவு ரயில் சேவை 10 மாதங்களுக்கு பிறகு தொடங்கப்படவுள்ளது. 
    சென்னை பரங்கிமலையில் கடந்த ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி நடந்த மின்சார ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த வழியாக இயக்கப்பட்டு வந்த மின்சார விரைவு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இந்தப்பகுதியில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்த பணி முடிந்தபிறகு, புதுப்பிக்கப்பட்ட தண்டவாளத்தில் விரைவு ரயில்கள் சேவை கடந்த சில மாதங்களாக இயக்கப்படுகின்றன. ஆனால், மின்சார விரைவு ரயில்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. 
    இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், திருமால்பூருக்கு மின்சார விரைவு ரயில்கள் சனிக்கிழமை ( ஜூன் 1) முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளன. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு 4 மின்சார விரைவு ரயில்கள், திருமால்பூர்- சென்னை கடற்கரைக்கு 1 மின்சார விரைவு ரயில் இயக்கப்படவுள்ளன.
    செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 7.50 மணிக்கு மின்சார விரைவு(அரை வேகம்) ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கு வந்தடையும். திருமால்பூர்-சென்னை கடற்கரைக்கு காலை 7.05 மணிக்கு மின்சார விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் செங்கல்பட்டுக்கு வந்து, அங்கிருந்து  காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை காலை  9.30 மணிக்கு வந்ததடையும்.
    செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 8.05, 8.25, 8.50 ஆகிய நேரங்களில் மின்சார விரைவு (அரை வேகம்)  ரயில்கள்புறப்படும். இந்த ரயில்கள் கடற்கரையை  முறையே காலை  9.47, 9.55, 10.20 மணித்து வந்தடையும். 
    திருமால்பூரில் இருந்து காலை 7.05  மணிக்கு விரைவு மின்சார ரயில்  புறப்பட்டு, செங்கல்பட்டுவை வந்தடையும். செங்கல்பட்டில் இருந்து 8.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை காலை 9.30 மணிக்கு வந்து சேரும்.
    அரக்கோணம்-திருமால்பூர்: அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு மின்சார விரைவு ரயில்  புறப்பட்டு,  திருமால்பூருக்கு  வந்தடையும். அங்கிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு வந்து சேரும். செங்கல்பட்டில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை காலை 10.28 மணிக்கு வந்து சேரும். சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.13 மணிக்கு மின்சார விரைவு ரயில் புறப்பட்டு திருமால்பூரை இரவு 8.40 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு அரக்கோணத்தை வந்து சேரும்.
    மின்சார ரயில் சேவை விரிவாக்கம்: 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டு சர்க்குலர் ரயில்கள் ஏப்ரல் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரு மின்சார ரயில் திருமால்பூர் வரையும், 3 மின்சார ரயில்கள் அரக்கோணம் வரை சேவை நீட்டிக்கப்படுகின்றன.
    சென்னை கடற்கரை-திருமால்பூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம் வரை சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் கடற்கரையில் இருந்து நண்பகல் 12.56 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்தை மாலை 4.20 மணிக்கு அடையும். சென்னை கடற்கரை-காஞ்சிபுரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருமால்பூர் வரை 
    நீட்டிக்கப்படுகிறது. இந்த சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.02 மணிக்கு புறப்பட்டு, திருமால்பூரை மாலை 5.50 மணிக்கு அடையும்.
    சென்னை கடற்கரை-திருமால்பூருக்கு இயக்கப்படும் மின்சார விரைவு ரயில் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.09 மணிக்கு  புறப்பட்டு, அரக்கோணத்தை இரவு 10.45 மணிக்கு வந்து சேரும்.
    சுற்றுவட்ட ரயில் நேரம் மாற்றம்: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம்-திருவள்ளூர்-சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் சுற்றுவட்ட ரயில் காலை 9.50 மணிக்கு பதிலாக காலை 9.20 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணத்தை நண்பகல் 12.45 மணிக்கு சென்றடையும். சென்னை கடற்கரை-திருவள்ளூர்-அரக்கோணம்-செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் சுற்றுவட்ட  மின்சார ரயில்  அரக்கோணத்தில் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை மாலை  4.33 மணிக்கு வந்து சேரும்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp