Enable Javscript for better performance
பழனியில்  2-ஆவது ரோப் கார் அமைக்கும் பணிக்கு மண் பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    பழனியில்  2-வது ரோப் கார் அமைக்கும் பணிக்கு மண் பரிசோதனை

    By DIN  |   Published on : 01st June 2019 11:32 AM  |   அ+அ அ-   |    |  

    palani

    பழனி மலைக் கோயிலுக்கு 2-ஆவது ரோப் கார் அமைப்பதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண் பரிசோதனை.


    பழனி மலைக் கோயிலுக்கு 2-ஆவது ரோப் கார் அமைக்கும் பணிக்காக பாறையின் உறுதித்தன்மையை அறிய மண் பரிசோதனை செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டம்,  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு சுமார் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்கப்பட்டது. இதனால் சுமார் 2 நிமிஷ நேரத்தில் மலைக் கோயில் உச்சியை சென்றடைய முடிந்ததால், இதற்கு பக்தர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில்,  பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மலைக் கோயிலுக்கு 2-ஆவது ரோப் கார் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

    இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு  பழனி மலைக் கோயிலுக்கு 2-ஆவது ரோப் கார் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  இதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

    இந்நிலையில்,  ரூ. 80 கோடி மதிப்பீட்டில் பிரான்ஸ் நாட்டின் பூமா நிறுவனம் இப்பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.  முதல் ரோப் காரில் ஒரு மணி நேரத்துக்கு 200 பேர் செல்லலாம். 2-ஆவதாக அமையவுள்ள ரோப் காரில் ஒரு மணி நேரத்தில் 1,200 பேர் பயணம் செய்யுமாறு வடிவமைக்கப்பட உள்ளது. இரண்டாவது ரோப் காருக்காக அடிவாரம் மற்றும் மலைக் கோயிலில் கீழ்தளம் மற்றும் மேல் தளம் அமைக்க பாறைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

    சென்னையில் இருந்து வந்திருந்த தனியார் நிறுவன அலுவலர்கள் மலைக் கோயில் மற்றும் அடிவாரத்தில் பல அடி ஆழம் குடைந்து மண் மாதிரிகளை சேகரித்தனர்.  இவை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு  பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் செயற்பொறியாளர் சக்திவேல், உதவி செயற்பொறியாளர்கள் பாலாஜி, குமார் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.  

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp