Enable Javscript for better performance
மத்திய அமைச்சரவையில் தமிழகம் உள்நோக்கத்துடன் புறக்கணிப்பு:  கே.எஸ்.அழகிரி- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அமைச்சரவையில் தமிழகம் உள்நோக்கத்துடன் புறக்கணிப்பு:  கே.எஸ்.அழகிரி

    By DIN  |   Published on : 01st June 2019 01:37 AM  |   அ+அ அ-   |    |  

    KS-ALAGIRI


    மத்திய அமைச்சரவையில் தமிழகம் உள்நோக்கத்துடன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    பிரதமர் நரேந்திர மோடியுடன் 57 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். பாஜகவோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அதிமுக சார்பாக எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கெனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அதிமுக பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பாஜக அரசுக்கு மிகமிக அவசியமாகும். 
    ஆனாலும், அதிமுகவிலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. இதன் மூலம் அதிமுகவை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
    பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரில் யாரையாவது வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம். 
    மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கருத முடியாது. எனவே, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp