Enable Javscript for better performance
வண்டிச்சோலை, எமக்குண்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வண்டிச்சோலை, எமக்குண்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

    By DIN  |   Published on : 01st June 2019 01:16 AM  |   அ+அ அ-   |    |  


    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட வண்டிச்சோலை, எமக்குண்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
    கோத்தகிரி கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட வண்டிச்சோலை, எமக்குண்டு பகுதியில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது.
     இந்நிலையில் எமக்குண்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா என்பவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். ஆடுகள் திரும்பாததால் சந்தேகமடைந்த அவர் தேயிலைத் தோட்டத்தில் தேடியுள்ளார். அப்போது சிறுத்தை தாக்கி ஒரு ஆடு இறந்து கிடந்தது. அதன் அருகே மற்றொரு ஆடு கழுத்துப் பகுதியில் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. மேலும் மூன்று ஆடுகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ராஜா, இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். 
    சிறுத்தை தாக்கியதற்கான தடயங்களை உறுதி செய்தனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp