உள்ளாட்சித் தேர்தலில் கவனம் செலுத்துங்கள்: திமுகவினருக்கு கனிமொழி வேண்டுகோள்

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற பணிகளைத் தொடங்க வேண்டும் என திமுகவினரை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார் கனிமொழி. உடன், தெற்கு மாவட்டச் செயலர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார் கனிமொழி. உடன், தெற்கு மாவட்டச் செயலர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர்


விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற பணிகளைத் தொடங்க வேண்டும் என திமுகவினரை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டு பேசியது: மிகச் சிறப்பானதொரு வெற்றியை ஓட்டப்பிடாரத்திலும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலும் பெற்றிருக்கிறோம். ஆளுங்கட்சியின் பண பலம், படை பலம் எல்லாவற்றையும் மீறி ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டே இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அது சாதாரண வெற்றியல்ல.
தமிழக மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் போராடுவோம். எத்தனை பேர் அங்கு நம்மை எதிர்த்து நின்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உரிமைக் குரலை யாராலும் ஒடுக்கிவிட முடியாது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 
அதில் வெற்றி பெற அத்தனை முயற்சிகளையும் செய்ய வேண்டும். விரைவிலேயே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரலாம்; இல்லையென்றால் தேர்தல் வரலாம். அந்தத் தேர்தலுக்கும் நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும் என்றார் அவர். முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி ஜூன் 3-ஆம் தேதி கட்சிக் கொடியேற்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. 
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலினை  திமுகவின் இளைஞரணிச் செயலராக நியமனம் செய்யக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com