நீலகிரியில் தொடர்ந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் குன்னூர்-ரன்னிமேடு இடையே ஜூன் 3 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்ப


நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் குன்னூர்-ரன்னிமேடு இடையே ஜூன் 3 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க விரும்பும் மலை ரயில் ஆர்வலர்களின் வசதிக்காக குன்னூர்-ரன்னிமேடு இடையே சிறப்பு மலை ரயிலின் இயக்கத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இதன்படி  குன்னூர்-ரன்னிமேடு இடையே, வழக்கமான உதய் ரயில் பெட்டிகளுடன் ஜூன் 3 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இந்த சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.
 இந்த நாள்களில் குன்னூரில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, பகல் 12 மணிக்கு ரன்னிமேடு பகுதியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் அங்கிருந்து பகல் 1 மணிக்கு புறப்பட்டு, 2 மணிக்கு குன்னூரை வந்தடையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com