சுடச்சுட

  

  குமரியில் கடல் நீர் உள்வாங்கியது: திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து

  By DIN  |   Published on : 04th June 2019 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kumari


  கன்னியாகுமரி கடலில் திங்கள்கிழமை கடல்  நீர்மட்டம் உள்வாங்கியதால் திருவள்ளுவர்  சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
  கன்னியாகுமரி கடல்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கி, காலை 9.30 மணி வரை கடல் நீர் உள்வாங்கி, தாழ்வாகக் காணப்பட்டது. 
  இதனால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கமாக காலை 8 மணிக்குத் தொடங்கவேண்டிய படகுப் போக்குவரத்து 9.30 மணிக்கு மேல் தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெற்றது. ஆனால்,  திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால், அங்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai