Enable Javscript for better performance
சென்னை - அரக்கோணம் இடையே ஜூன் 4 - 7ம் தேதி வரை இரவு நேர ரயில் சேவையில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை - அரக்கோணம் இடையே ஜூன் 4 - 7ம் தேதி வரை இரவு நேர ரயில் சேவையில் மாற்றம்

    By DIN  |   Published on : 04th June 2019 12:36 PM  |   அ+அ அ-   |    |  

    train

     

    சென்னை-அரக்கோணம் பிரிவில்,  திருநின்றவூர்-திருவள்ளூர் இடையே வேப்பம்பட்டு ரயில் நிலைய யார்டில் பயணிகள் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெறுவதால், ஜூன் 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஜூன் 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: மூர் மார்க்கெட் வளாகம் -அரக்கோணத்துக்கு இரவு 9.15, 10.10, 10.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

    மூர் மார்க்கெட் வளாகம் - திருவள்ளூருக்கு இரவு 8.55,  9.40, 11.10, 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை-ஆவடிக்கு இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,  மூர் மார்க்கெட் வளாகம்-ஆவடிக்கு இரவு 9.50, 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    திருவள்ளூர் - மூர் மார்க்கெட் வளாகத்துக்கு இரவு 8.50,  9.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் -ஆவடிக்கு  இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. திருத்தணி-மூர் மார்க்கெட் வளாகம் இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம்-மூர் மார்க்கெட் வளாகம் மாலை 6.55,  இரவு 9.45  ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    ஜூன் 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள்: மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து ஆவடிக்கு இரவு 10.10, 10.15 ஆகிய நேரங்களில் இரண்டு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல, மூர் மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு இரவு 11.45, 11.50 ஆகிய நேரங்களில் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன. வேளச்சேரியில் இருந்து ஆவடிக்கு  இரவு 9.05 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மூர் மார்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

    இதுபோல, மறுமார்க்கமாக திருவள்ளூரில் இருந்து  ஆவடிக்கு  இரவு 10.55 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. திருத்தணியில் இருந்து மூர் மார்க்கெட் வளாகத்துக்கு இரவு 10 மணிக்கும், அரக்கோணம்-மூர் மார்க்கெட் வளாகத்துக்கு  இரவு 10.10 மணிக்கும், தலா ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.  

    பயணிகள் சிறப்பு ரயில்கள் அரக்கோணம்-திருவள்ளூர் ரயில் நிலையங்களுக்கு இடையே  விரைவுப் பாதையில் இயக்கப்படும். எனவே, செஞ்சி பானம்பாக்கத்தில் நிறுத்தப்படாது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp