Enable Javscript for better performance
ஹிந்தியை கற்பதால், தமிழுக்கு எந்தவித குந்தகமும் வரப்போவதில்லை: கிருஷ்ணசாமி- Dinamani

சுடச்சுட

    

    ஹிந்தியை கற்பதால், தமிழுக்கு எந்தவித குந்தகமும் வரப்போவதில்லை: கிருஷ்ணசாமி

    By DIN  |   Published on : 04th June 2019 04:33 PM  |   அ+அ அ-   |    |  

    krishnaswamy_puthiya_tamili


    ஹிந்தி மொழியை பயில்வதால் தமிழ் மொழிக்கு எந்தவித குந்தகமும் வரப்போவதில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார். 

    புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஹிந்தி மொழி பயில்வதால் தமிழுக்கு எந்தவித குந்தகமும் வரப்போவதில்லை என்று பேசினார். இதுதொடர்பாக, அவர் மேலும் பேசுகையில்,  

    "தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் அல்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மக்களோடு தொடர்பு கொள்வதற்கு வசதியாக இருக்கக்கூடிய ஹிந்தி மொழியை பயிலும் வாய்ப்பு இல்லை. ஹிந்தி மொழி திணிக்கப்படாமல், விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து படிப்பதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது. 

    கிராமப்புறத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய ஏழை எளிய மாணவர்களும் அரசின் மூலமாக ஹிந்தி மொழியை இலவசமாக கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பை நழுவ விடாமல் தமிழகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.   

    தமிழ்மொழி 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. 

    உலக நாடுகள் தங்கள் அளவுக்கு பொருளாதாரத்தை சுருக்கிக் கொண்டு வருகின்றனர். இந்த சமயத்தில் தமிழர்கள் பெருமை, கல்வி, பொருளாதாரம் மற்றும் பல தளங்களில் தங்களை விரிவுப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக இன்றைய தலைமுறையாவது ஹிந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பை தமிழகம் உருவாக்கித் தரவேண்டும். 

    ஏற்கெனவே, தமிழகத்தில் சிபிஎஸ்இ மற்றும் சர்வதேச பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பள்ளிகளில் ஹிந்தியை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. 

    ஹிந்தியை கட்டாயமாக பயில வேண்டும் என்கிற சூழல் தற்போது இல்லை. ஆனால், கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்போது, அதை ஏன் நிராகரிக்க வேண்டும். இதன்மூலம் தமிழுக்கு எந்தவிதமான குந்தகமும் வரப்போவதில்லை. 

    தற்போது ஐஏஎஸ் படித்து, வடமாநிலத்தில் பதவி பெறுபவர்கள் ஹிந்தியை கட்டாயம் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்" என்றார். 

    முன்னதாக புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில், இந்தியாவில் மும்மொழிக் கொள்கை நீடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில், தங்கள் மாநில மொழி மற்றும் ஆங்கில மொழியுடன் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. 

    ஹிந்தி மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு தென் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக,  மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தி மொழியை திணிப்பதற்கு தமிழகத்தில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

    இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய ஷரத்தை வரைவு அறிக்கையில் இருந்து மத்திய அரசு நீக்கியது. அதற்குப் பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை மாணவர்களே தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp