தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஜூன் 11-இல் பொருளாதார கணக்கெடுப்புப் பயிற்சி

தமிழகம், புதுச்சேரிக்கு 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்புப் பயிற்சி வரும் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழகம், புதுச்சேரிக்கு 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்புப் பயிற்சி வரும் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
 ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியில் தகவல் திரட்டுவதற்குத் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் முறையை பயன்படுத்துதல், அறிக்கை தயாரித்தல் போன்றவை இடம்பெறும். இந்தக் கணக்கெடுப்புக்குத் தேசிய அளவிலான பயிலரங்கு கடந்த மே 14-இல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் விரிவான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மாநில அளவிலான பயிற்சி வரும் 11 -ஆம் தேதி சென்னை எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள அம்பாஸிடர் பல்லவா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
 மாநில அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல், தொழில்துறை மற்றும் குறு-சிறு-நடுத்தர தொழில்கள் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தேசியப் புள்ளியியல் அலுவலக அதிகாரிகளும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள மண்டல அளவிலான அதிகாரிகள் என சுமார் 350 பேர் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த் பயிற்சிப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கவுள்ளார். தேசிய புள்ளியியல் அலுவலக துணைத் தலைமை இயக்குநர் எஸ். துரைராஜூ மைய நோக்க உரை நிகழ்த்தவுள்ளார்.
 பொருளாதார கணக்கெடுப்பு என்பது கட்டுமான நிறுவனங்கள், சொந்தப் பயன்பாடு தவிர்த்த பொருள்கள், சேவைகளின், உற்பத்தி, விநியோகம், தானிய உற்பத்தி, தோட்டப் பயிர் அல்லாத வேளாண் தொழில் (பொது நிர்வாகம், பாதுகாப்பு, கட்டாய சமூகப் பாதுகாப்பு தவிர்த்த) வேளாண் சாராத தொழில் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இதில் அடங்கும்.
 கணக்கெடுப்புத் தேதியில் செயல்படாமல் இருந்தாலும், அதற்கு முந்தைய செயல்பாடு குறித்தும், பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்படும். முதலாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு 1977 -ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன்பின்னர் 1980, 1990, 1998, 2005 ஆகிய ஆண்டுகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆறாவது கணக்கெடுப்பு 2013 -ஆம் ஆண்டு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com