
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை ரூ.3.95-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்துள்ளது.
தற்போது முட்டையின் தேவை அதிகரித்திருப்பதும், பள்ளிகள் திறப்பு, தென்மேற்கு பருவமழை போன்றவற்றால் வரும் நாள்களில் அதன் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முட்டை விலையை உயர்த்த சனிக்கிழமை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.95-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை மண்டலத்தில் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, முட்டையின் விலை ரூ.4.05-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை ரூ. 3 உயர்த்தப்பட்டு, கிலோ ரூ.84-ஆகவும், கறிக்கோழி விலை ரூ.97-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.