சுடச்சுட

    
    CREZY-MOHAN


    நடிகர் கிரேஸி மோகனின் உடல் சென்னையில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யபட்டது.
     மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை காலமான கிரேஸி மோகனின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக மந்தவெளி அம்மணி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.  சினிமா, அரசியல், நாடகம் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் கிரேஸி மோகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
     சூர்யா, பாரதிராஜா அஞ்சலி: நடிகர்கள் கவுண்டமணி, நாசர், டெல்லி கணேஷ், சூர்யா, பிரசாந்த், விவேக், வையாபுரி, தாமு, மனோபாலா, தயாரிப்பாளர்  ராம்குமார், ஐசரி கணேஷ்,  நடிகைகள் சச்சு, கோவை சரளா, மும்தாஜ், குட்டி பத்மினி, கௌதமி, காயத்ரி ரகுராம்,  இயக்குநர்கள் பாரதிராஜா, சந்தான பாரதி, சுரேஷ் கிருஷ்ணா, தரணி, ரமேஷ் கண்ணா, வசந்த், கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து,   பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் நட்ராஜ், பாடகர் எஸ்.பி.
    பாலசுப்பிரமணியம், கார்ட்டூனிஸ்ட் மதன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கிரேஸி மோகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    இறுதிச் சடங்கில் கமல்: பின்னர், காலை 10.30 மணியளவில் கிரேஸி மோகனின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூரிலிருந்து பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மயானத்துக்கு வந்த நடிகர் கமல்ஹாசன், கிரேஸி மோகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். அவருடன் நடிகை பூஜாகுமாரும் வந்திருந்தார். 11.30 மணியளவில் கிரேஸி மோகனின் உடல் எரியூட்டப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai