5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 12) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று
5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு


தென்மேற்குப் பருவமழை காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 12) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 12) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 12) மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. 
அதேநேரத்தில், திருவள்ளூர், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி,  பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.  எனவே, வெப்பத்தால் ஏற்படும் சோர்வை தவிர்க்க பொதுமக்கள் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று 
அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சுருளகோட்டில் தலா 100 மி.மீ., மழை பதிவானது. பெருஞ்சாணியில் 70 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 60 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, நாகர்கோவிலில் தலா 50 மி.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சின்னகல்லார், வால்பாறை,  கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, பூதப்பாண்டி ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. 
12 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. 
அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி, நுங்கம்பாக்கம், வேலூர், மதுரை தெற்கில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடலூர், திருச்சியில் தலா 104 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 103 டிகிரி, நாகப்பட்டினத்தில் 102 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி, அதிராமப்பட்டினம், தொண்டியில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com