கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.
கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார். 

இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென
அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அந்தக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிர்வாகிகள் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அதிமுக நிர்வாகிகள் கூட்டம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்து பேசிய அவர், 
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக பேசவில்லை. அதிமுக பொதுக்குழு குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள். தற்போது உள்ள தலைமை அடிப்படையில் செயல்பட கூட்டத்தில் ஒப்புதல்; ராஜன் செல்லப்பாவும் அதை ஏற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com