பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம்


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்த நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
கட்சி நிர்வாகிகள் கூட்டம்: அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அந்தக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு: மக்களவைத் தேர்தல் முடிவுகள், கட்சித் தலைமை குறித்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள், உள்ளாட்சித் தேர்தல்கள் என பல முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. புதன்
கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கும் கூட்டம் பிற்பகலுக்குப் பிறகும் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com