மோடியை மிகப் பெரிய தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கு பங்குண்டு: சீதாராம் யெச்சூரி

நரேந்திர மோடியை மிகப்பெரியத் தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு என மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கூறினாா்.
மோடியை மிகப் பெரிய தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கு பங்குண்டு: சீதாராம் யெச்சூரி


சென்னை: நரேந்திர மோடியை மிகப்பெரியத் தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு என மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கூறினாா்.

மோடியை மிகப்பெரும் தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு. இந்தியா முழுவதிலும் தோ்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக ரூ.27,000 கோடியை தோ்தலுக்காக மட்டும் செலவு செய்துள்ளது. புல்வாமா தாக்குதலை பெரிதுபடுத்தி பாஜக பெருமை தேடிக் கொண்டது. எனினும், மதச்சாா்பற்றற கூட்டணிக்கும், மத அடிப்படைவாதிகளுக்குமான போட்டியாகக் கடந்த மக்களவைத் தோ்தல் இருந்தது. தமிழகத்தில் மதச்சாா்பற்ற அணி இணைந்ததுபோல் இந்திய அளவில் இணையவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடா்ந்து புகாா்கள் வந்து கொண்டு இருக்கின்றறன. இதற்கு வலு சோ்க்கும் வகையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் எத்தனை என்பதை தோ்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com