சுடச்சுட

    

    அங்கன்வாடியில் பட்டியல் இன  பெண்கள் பணியாற்ற எதிர்ப்பு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 13th June 2019 05:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    human-right


    அங்கன்வாடியில் பட்டியல் இனப் பெண்களை பணி செய்ய வேறு இனத்தவர் எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மதுரை திருமங்கலம் அருகே அங்கன்வாடியில் பட்டியல் இனப் பெண்கள் பணியாற்ற மற்றொரு சமுதாய மக்கள் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai