சுடச்சுட

  


    ராஜராஜ சோழன் காலத்து சமூகம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கூறியிருப்பது ஏற்புடையதுதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
  இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
  சோழர்கள் உருவாக்கிய தாராசுரம் கோயில், வீராணம் ஏரி, இவையெல்லாம் அவர்களுடைய பொறியியல் நுட்பம், நீர்வழிச்சாலை வசதிகள் மகத்தான சாதனைகளாகும். அதனால், அவர்களுடைய ஆட்சிக் காலத்தை ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய பிறப்பின் காரணமாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். தீண்டாமைக் கொடுமை இருந்திருக்கிறது. இவையெல்லாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அன்றைக்கு  சமூகப் படிநிலை அப்படித்தான் இருந்தது. அதனால்,  ராஜராஜ சோழனைக் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ரஞ்சித் சொல்லியிருக்க மாட்டார். மாறாக,  ராஜராஜன் காலத்து சமூகத்தைப் பற்றி சொல்லி இருந்தால் அது ஏற்புடையதே  என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai