Enable Javscript for better performance
2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு

    By DIN  |   Published on : 13th June 2019 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை  ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
    இந்தத் தேர்விற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் ஆசிரியர் தேர்வு வாரிய  இணையதளத்தில் (http://trb.tn.nic.in/)  வெளியிடப்பட்டுள்ளது.
    பாட வாரியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை: 
    தமிழ்    319 
    ஆங்கிலம்    223 
    கணிதம்    279 
    இயற்பியல்    210 
    வேதியியல்     56 
    தாவரவியல்    154 
    விலங்கியல்    144 
    வரலாறு    104 
    புவியியல்    11 
    பொருளாதாரம்    211 
    வணிகவியல்    99 
    அரசியல் அறிவியல்    14 
    உடற்கல்வியியல்    16 
    உயிர்வேதியியல்    1 
    நுண்ணுயிரியியல்    1 
    மனையியல்    1 
    இந்திய பண்பாடு    1 
    என மொத்தம் -2144 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆன்லைன் முறையில் இந்தத் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai